நாடு முழுவதும் 443 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 32,017 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்


நாடு முழுவதும் 443 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 32,017 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்
x
தினத்தந்தி 17 Jun 2021 4:23 PM GMT (Updated: 17 Jun 2021 4:23 PM GMT)

நாடு முழுவதும் 443 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 32,017 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் திரவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. இதுவரை 1,830க்கும் மேற்பட்ட டேங்கா்களில் சுமாா் 32,017 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 443 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தென் மாநிலங்களுக்கு 17,600 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை இதுவரை விநியோகித்துள்ளன. 75 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழகத்தை இது வரை வந்தடைந்துள்ளன. தமிழ்நாட்டிற்கு 5,674 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்துக்கு 5,674 மெட்ரிக் டன், மராட்டியத்திற்கு 614 மெட்ரிக் டன், உத்தர பிரதேசத்துக்கு 3797 மெட்ரிக் டன், மத்திய பிரதேசத்துக்கு 656 மெட்ரிக் டன், டெல்லிக்கு 5,722 மெட்ரிக் டன், ஹரியாணாவுக்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானுக்கு 98 மெட்ரிக் டன், கா்நாடகத்துக்கு 4149 மெட்ரிக் டன், உத்தரகண்ட்டுக்கு 320 மெட்ரிக் டன், ஆந்திர பிரதேசத்துக்கு 4,036 மெட்ரிக் டன், பஞ்சாபுக்கு 225 மெட்ரிக் டன், கேரளத்துக்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 3,255 மெட்ரிக் டன், ஜாா்கண்ட்டுக்கு 38 மெட்ரிக் டன், அஸ்ஸாமுக்கு 560 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Next Story