தேசிய செய்திகள்

மது குடிக்க சொல்லி மனைவியை மிரட்டிய என்ஜினீயர் போலீசில் புகார் + "||" + Telling them to drink alcohol The engineer who intimidated his wife

மது குடிக்க சொல்லி மனைவியை மிரட்டிய என்ஜினீயர் போலீசில் புகார்

மது குடிக்க சொல்லி மனைவியை மிரட்டிய என்ஜினீயர் போலீசில் புகார்
புதுவை பெரிய காலாப்பட்டு, மது குடிக்க சொல்லி மனைவியை மிரட்டிய என்ஜினீயர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி, 

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 28). இவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் வெங்கடேஷ்பாபுவுக்கும், கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 100 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக ரேவதியின் பெற்றோர் கொடுத்தனர்.

ஏற்கனவே வெங்கடேஷ்பாபுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது மனைவியையும் குடிக்க சொல்லி வற்புறுத்தியதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதுதொடர்பாக ரேவதி புதுவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வெங்கடேஷ்பாபு தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி தருமாறு கூறி மிரட்டி வருகிறார். தன்னையும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துகிறார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.