உ.பி.: ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த படகு; 150 பேர் மீட்பு


உ.பி.:  ஆற்றில் நள்ளிரவில் தத்தளித்த படகு; 150 பேர் மீட்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 2:13 PM IST (Updated: 18 Jun 2021 2:13 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் என்ஜின் கோளாறால் ஆற்றின் நடுவே நள்ளிரவில் தத்தளித்த படகில் இருந்த 150 பேரை என்.டி.ஆர்.எப். குழு மீட்டு உள்ளது.



குஷிநகர்,

உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் கந்தக் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  அந்த படகில் 150 பேர் பயணம் செய்துள்ளனர்.  திடீரென படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு ஆற்றின் நடுவே நள்ளிரவில் நின்றுள்ளது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் படகில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்து கோரக்பூர் நகர தேசிய பேரிடர் பொறுப்பு படையில் (என்.டி.ஆர்.எப்.) இருந்து குழு ஒன்று உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளது.  மாவட்ட மாஜிஸ்திரேட், எஸ்.பி. ஆகியோரும் சென்றுள்ளனர்.

அதன்பின் இன்று அதிகாலை 2.20 மணியளவில் படகை நெருங்கிய குழுவானது 10 நிமிடங்களில் மீட்பு பணியை தொடங்கியது.  பின்னர் பலமணி நேரம் நடந்த மீட்பு பணியில் 40 பேரை நாட்டு படகுகளில் மீட்டனர்.  மற்றவர்களும் மீட்கப்பட்டு விட்டனர்.


Next Story