ஹரித்வார் கும்பமேளா போலி கோவிட் சோதனை விவகாரம்: நீதி விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும் - திரிவேந்திர சிங் ராவத்


ஹரித்வார் கும்பமேளா போலி கோவிட் சோதனை விவகாரம்:  நீதி விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும் - திரிவேந்திர சிங் ராவத்
x
தினத்தந்தி 18 Jun 2021 6:46 PM GMT (Updated: 2021-06-19T00:16:06+05:30)

ஹரித்வார் கும்பமேளா போலி கோவிட் சோதனை விவகாரத்தில் நீதி விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும் என திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

ஹரித்வார்,

ஹரித்வாரில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 30 தேதி வரை நடந்த கும்பமேளாவின் போது​​, இரண்டு தனியார் ஆய்வகங்களால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் சோதனை அறிக்கைகள் போலியானவை என கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முழு விவகாரம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நைனிதால் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலி கோவிட் சோதனைகள் (ஹரித்வார் கும்பமேளாவின் போது) கொலை முயற்சியின் குற்றமாகும். இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும். இந்த மோசடி எப்போது நிகழ்ந்தது என்பதையும் மக்களிடம் தெளிவாக கூற வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

கும்ப மேளா நிகழ்வுக்குப் பிறகு உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story