இந்தியாவில் நேற்று 19.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்


இந்தியாவில் நேற்று 19.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:46 AM GMT (Updated: 19 Jun 2021 4:46 AM GMT)

இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 19.02- லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது பரவல் தணியத்தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய நாளொன்றுக்கு ஏறத்தாழ 19 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் நேற்று ஒருநாளில் 19,02,009- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 38 கோடியே 92 லட்சத்து 07  ஆயிரத்து 637- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதேபோல், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 27 கோடியை தாண்டியுள்ளது.


Next Story