ராகுல் காந்திக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து


ராகுல் காந்திக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2021 8:24 AM GMT (Updated: 2021-06-19T13:54:04+05:30)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 50-வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்திக்கு தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், ''எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 

சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்காக அவரது தன்னலமற்ற, அயராத உழைப்பைப் பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்த அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியாக உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story