பஞ்சாப்பில் உட்கட்சி பூசல்: 22-ம் தேதி சோனியா காந்தியை சந்திக்கிறார் அமிரீந்தர்சிங்

பஞ்சாப்பில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி அமிரீந்தர்சிங், 22-ம் தேதி காங்.இடைகால தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசுகிறார்.
சண்டிகர் ,
- பஞ்சாபில் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர். கோஷ்டி பூசலால் கட்சி உடைவதை தவிர்க்க தன் அதிருப்தியாளர்களுடன் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.
இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் ஜூன் 22-ம் தேதி அமரீந்தர் சிங் டெல்லியில் காங். இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story