அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தளி,
குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அமராவதி ஆற்றில் 10 நாட்களுக்கும், பிரதான கால்வாயில் 15 நாட்களுக்கும் தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கு பிரதான கால்வாய் மூலமாக நேற்று முதல் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதுடன் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் உள்ள பயிர்களையும் காப்பாற்றுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story