ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசன நேரத்தில் மாற்றம்


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசன நேரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:44 AM IST (Updated: 21 Jun 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

ஸ்ரீகாளஹஸ்தி, 

ஆந்திர மாநில அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் ஒருசில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

மேலும் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தா்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம். ஆனால் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோவில் சார்பில் நடத்தப்படும். அதில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய ேவண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

Next Story