ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு பாதுகாப்பு குறைபாடு: 14 போலீசார் பணியிடை நீக்கம்

பா.ஜ.க.வை சேர்ந்த மேலவை எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா, மத்தியபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
குவாலியர்,
பா.ஜ.க.வை சேர்ந்த மேலவை எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா, மத்தியபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு சென்ற போலீசார், சிந்தியா வாகனத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்குப் பதிலாக, அதே தோற்றத்தில் இருந்த வேறு வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுவிட்டனர். இதனால் சிந்தியா பாதுகாப்பு போலீசார் இல்லாமலே குவாலியரை சென்றடைந்தார்.
போலீசாரின் இந்த கவனக்குறைவுக்கு உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 14் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story