டெல்டா பிளஸ் கொரோனாவால் 3-வது அலைக்கு வாய்ப்பு? நிபுணர்கள் கவலை


டெல்டா பிளஸ் கொரோனாவால்  3-வது அலைக்கு வாய்ப்பு? நிபுணர்கள் கவலை
x
தினத்தந்தி 22 Jun 2021 2:55 PM GMT (Updated: 22 Jun 2021 2:55 PM GMT)

மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 22 பேருக்கு டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை சரியத்தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கிய நிலையில், டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா இந்தியாவில் பரவியிருப்பது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.  மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 22 பேருக்கு டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் உடனடியாக கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தி மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும். பரவலாக சோதனைகளை நடத்த வேண்டும். 

தடம் அறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியையும் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர் குழு தலைவரான விகே பால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இந்த தகவலை கூறினார். 


Next Story