கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா


கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2021 2:57 PM IST (Updated: 23 Jun 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரு,

நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், புதிதாக கர்நாடகத்திலும், 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது,

மைசூர் மற்றும் பெங்களூருவில் தலா ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மராட்டியம், மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை நேற்று 22 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story