மராட்டியத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


மராட்டியத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 3:33 PM GMT (Updated: 2021-06-23T21:03:57+05:30)

மராட்டியத்தில் நேற்று முன் தினம் தினசரி கொரோனா பாதிப்பு 6,270- ஆக இருந்தது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,006- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,032- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 163- பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 59 லட்சத்து 97 ஆயிரத்து 587- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்து 53 ஆயிரத்து 290- ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 303- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  1 லட்சத்து 21 ஆயிரத்து 859- ஆக உள்ளது. 

Next Story