தேசிய செய்திகள்

அப்துல் கலாம் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரெயிலில் பயணம் + "||" + President Ramnath Govind travels by train on the way to Abdul Kalam

அப்துல் கலாம் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரெயிலில் பயணம்

அப்துல் கலாம் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரெயிலில் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்கிறார்.
லக்னோ,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தனது பணிக்காலத்தின்போது கடந்த 2003-ம் ஆண்டு மே 30-ந் தேதி ஹர்னாட்டில் இருந்து பாட்னாவுக்கு ரெயிலில் சென்றார். அதன்பிறகு எந்த ஜனாதிபதியும் ரெயில் பயணம் மேற்கொண்டதில்லை.அப்துல் கலாமின் ரெயில் பயணம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ரெயில் பயணம் செல்ல உள்ளார்.

அந்த வகையில் டெல்லியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 1.30 மணி அளவில் உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் கான்பூரை அடைகிறார்.

இந்த பயணத்துக்காக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை கொண்ட ‘ஜனாதிபதி எக்ஸ்பிரஸ்’ உருவாக்கப்படுகிறது. இதில் 14 பெட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கான இந்த ரெயிலில் ஜனாதிபதி தனது மனைவி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள், ரெயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களுடன் பயணம் செய்கிறார். உத்தரபிரதேசத்தில் 4 நாட்கள் அவர் பயணம் மேற்கொள்கிறார்.இதில் கான்பூரில் உள்ள தனது மூதாதையர் கிராமத்துக்கு, ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக அவர் செல்கிறார். மேலும் தனது சொந்த கிராமத்துக்கும் 27-ந் தேதி ரெயில் மூலம் செல்வார் என தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு 28-ந் தேதி மீண்டும் அவர் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதிக்கான இந்த சிறப்பு ரெயிலில் ராம்நாத் கோவிந்துக்காக 7 நட்சத்திர வசதி மற்றும் குண்டு துளைக்காத வகையில் சிறப்பு பெட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 2 படுக்கை அறை, ஒரு ஹால், 2 கழிவறைகள், தொலைக்காட்சி, வை-பை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் ஜனாதிபதியின் ரெயில் பயணத்துக்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக தண்டவாள பாதுகாப்பு முதல் ரெயில் நிலைய பாதுகாப்பு வரை அனைத்தும் நேர்த்தியாக செய்யப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.
3. கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்.
5. 75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.