கர்நாடக மாநிலம் மைசூருவில் ஊரடங்கு விதிமீறல் - ஒரே நாளில் 419 வாகனங்கள் பறிமுதல்


கர்நாடக மாநிலம் மைசூருவில் ஊரடங்கு விதிமீறல் - ஒரே நாளில் 419 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Jun 2021 1:28 AM IST (Updated: 25 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரே நாளில் 419 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மைசூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளது. இதனால் பெங்களூரு உள்பட 29 மாவட்டங்களில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை செய்து உள்ளது. மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்படவில்லை.

அதே நேரம் மைசூரு மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மைசூரு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களிடம் இருந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதாவது நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 419 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் 370 இருசக்கர வாகனங்கள், 47 கார்கள், 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story