இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரியின் பாதுகாவலருடன் போலீசார் மோதல்

இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், நிதின்கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சிம்லா,
இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், நிதின்கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களில் சிலர், கட்கரி பிரதமராக வேண்டும் என்று கோஷம் எழுப்பியதாகவும், அதற்கு முதல்-மந்திரியின் பாதுகாவலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது காவலுக்கு நின்ற குல்லு போலீசாருடனும் வாக்குவாதம் ஏற்பட அது சண்டையாக மாறி உள்ளது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதல்-மந்திரியின் பாதுகாவலரை அறைந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பரவி உள்ளது.
இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், “இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் கூறினார்.
Related Tags :
Next Story