ஆண்டின் கடைசி சூப்பர் மூன் ஒடிசா பஞ்சாப் கோவா உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்தது


ஆண்டின் கடைசி சூப்பர் மூன் ஒடிசா பஞ்சாப் கோவா உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்தது
x
தினத்தந்தி 25 Jun 2021 7:13 AM GMT (Updated: 25 Jun 2021 7:13 AM GMT)

ஸ்ட்ராபெரி மூன் என அழைக்கப்படக் கூடிய ஆண்டின் கடைசி சூப்பர் மூன் ஒடிசா, பஞ்சாப், கோவா, உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரிந்தது.


புதுடெல்லி,

சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய நிலவாக தெரிவது தான் சூப்பர் மூன் என அழைக்கின்றனர். இந்தநிலையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடிய இந்த பெரிய நிலவு ஸ்ட்ராபெரி மூன் எனவும் அழைக்கப்படுகிறது. 

இந்நிலையில், பல மாநிலங்களில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சரியாக தெரியவில்லையாம். ஆனால், இந்த அழகான ஸ்ட்ராபெரி மூன் நேற்று இரவு ஒடிசா மாநிலம் பூரி நகரில் மிக தெளிவாக காண முடிந்ததாம்.

கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இந்த சூப்பர் முன் மிக தெளிவாக தெரிந்துள்ளது. இந்த சூப்பர் மூன் தான் இந்த ஆண்டுக்கான கடைசி சூப்பர் மூன் இனி இந்த ஆண்டில் சூப்பர் மூன் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

Next Story