மருந்தில்லாமல் இளைஞருக்கு வெறும் ஊசியை மட்டும் குத்திய செவிலியர்- வீடியோ


மருந்தில்லாமல்  இளைஞருக்கு வெறும் ஊசியை மட்டும்  குத்திய செவிலியர்- வீடியோ
x
தினத்தந்தி 25 Jun 2021 12:43 PM GMT (Updated: 2021-06-25T18:13:10+05:30)

மருந்தில்லாமல் இளைஞர் ஒருவருக்கு வெறும் ஊசியை மட்டும் குத்திய செவிலியர் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

பாட்னா

பீகாரில், தடுப்பு மருந்தை ஏற்றாமல், வெறும் ஊசியை மட்டும் இளைஞர் ஒருவருக்கு செவிலியர்  குத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. சாப்ராவில் நடந்த இந்த நிகழ்வை தடுப்பூசி போட வந்தவரின் நண்பர் செல்போனில் படம் பிடித்தார்.

புதிய சிரிஞ்சை அதன் பாக்கெட்டில் இருந்து எடுக்கும் நர்ஸ்,அதில் தடுப்பு மருந்தை எடுக்காமல்,நேரடியாக இளைஞரின் கையில் போடுவது தெளிவாக பதிவாகி உள்ளது. வீடியோவின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நர்ஸ் தடுப்பூசி போடும் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சரன் மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி (டி.ஓ.ஓ) டாக்டர் அஜய் குமார் கூறும் போது 

“வீடியோ குறித்த தகவல்கள் எனக்கு கிடைத்தது. செவிலியரின் அலட்சியம் தெரிந்தவுடன், செவிலியர் சந்தா குமாரி உடனடியாக  ஊசிபோடும் பணியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவரிடமிருந்து 48 மணி நேரத்திற்குள் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இருப்பினும், செவிலியர் இதை வேண்டுமென்றே செய்யவில்லை. ஊழியர்கள் மிகுந்த மஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த நபர் மீண்டும் அழைக்கப்படுவார், அவருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் என்று கூறினார். Next Story