தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் கடிதம்


தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் கடிதம்
x
தினத்தந்தி 25 Jun 2021 4:23 PM GMT (Updated: 2021-06-25T21:53:12+05:30)

டெல்டா பிளஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா முதல் அலையை விட, 2வது அலையில் அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்பட்டன.  இந்நிலையில், தமிழகம், குஜராத், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய 8 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், டெல்டா பிளஸ் கொரோனாவை கட்டுப்படுத்துதல், தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார்.
Next Story