புனே நிறுவனத்தில் அமெரிக்க தடுப்பூசியை தயாரிக்கும் பணி தொடங்கியது

புனே சீரம் நிறுவனத்தில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவன தடுப்பூசியை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
புனே,
அமெரிக்காவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தார் ‘கோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கு அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு பணி தொடங்கி உள்ளது.
சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி பூனவாலா டுவிட்டரில் நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இந்த தடுப்பூசி அனேகமாக வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று பூனவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
A new milestone has been reached; this week we began our first batch of Covovax (a COVID-19 vaccine developed by @Novavax) at our facility, here in Pune. pic.twitter.com/FqoVTUa1nO
— SerumInstituteIndia (@SerumInstIndia) June 25, 2021
Related Tags :
Next Story