எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் - உத்தரபிரதேச மந்திரி கருத்து

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை விவகாரத்துறை இணை மந்திரியாக இருக்கும் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா நேற்று பல்லியாவில் உள்ள தனது இல்லத்தில் பரபரப்பு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பாகிஸ்தானை புகழ்கிறார்கள். பாகிஸ்தானுக்கு சென்றிருந்தபோது, ‘பாகிஸ்தான் வாழ்க, இந்துஸ்தான் ஒழிக’ என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்களுக்கு அரசியல் கண்ணியம் எதுவும் இல்லை. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியின் இதயம் பாகிஸ்தானில் இருக்கிறது. அவர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார். அவருக்கு பாகிஸ்தான் மீது அளவற்ற பிரியம் இருந்தால், பாகிஸ்தானுக்கே போகட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story