கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல் - 40 கோடி மாதிரிகளை பரிசோதித்தது


கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல் - 40 கோடி மாதிரிகளை பரிசோதித்தது
x
தினத்தந்தி 27 Jun 2021 1:08 AM IST (Updated: 27 Jun 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

40 கோடி மாதிரிகளை பரிசோதித்து, கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை எளிதாக இந்தியா வீழ்த்தியது. ஆனால் 2-வது அலையை வீழ்த்த பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று.

குறிப்பாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகளை பல நாட்கள் இந்தியா சந்தித்தது. இதனால் தொற்று பரவலை தடுப்பதற்கு அதிகளவில் மாதிரிகள் பரிசோதனையை இந்தியா நடத்தி வருகிறது. கடந்த 1-ந்தேதி வரையில் மட்டுமே 35 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா நேற்று முன்தினம் வரையில் 40 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரத்து 892 மாதிரிகளை அபாரமாக பரிசோதித்து சாதித்துள்ளது. இது ஒரு புதிய மைல் கல் ஆகும்.

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் திறனை விரைவாக அதிகரித்ததின்மூலமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதின் மூலமும், மலிவு விலையில் கண்டறியும் கருவிகளில் புதுமைகளை எளிதாக்குவதின் மூலமும், சோதனைத் திறனை விரிவுபடுத்துவதின்மூலமும், பல்வகைப்படுத்துவதன் மூலமும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேம்படுத்தி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறியதாவது:-

பரிசோதனைகளில் அதிவேகம் காட்டியது, ஆரம்ப கால அடையாளம் காணலையும், தனிமைப்படுத்தலையும் வழிநடத்தியது. திறம்பட சிகிச்சை அளிக்கச்செய்தது.

இதனால் குறைவான இறப்பு விகிதத்தை பதிவு செய்ய முடிந்தது.

பரிசோதனையில் இப்போது எட்டப்பட்டுள்ள புதிய மைல்கல், இந்தியா, பரிசோதனை, தடம் அறிதல், கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகிய 5 அம்ச உத்திகளை திறம்பட செயல்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும்.

இது தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த எங்களுக்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story