அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு


அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 27 Jun 2021 11:08 AM IST (Updated: 27 Jun 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 31.51 கோடி 1,800 தடுப்பூசிகளை இலவசமாக  வினியோகம் செய்துள்ளது.

மாநிலங்களிடம் தற்போது 1.15 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும். 

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story