நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும் - ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார்.
லடாக்,
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.
மேலும்,லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உரையாடினார். ராணுவ வீரர்களிடையே மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்ந்த் சிங் பேசியதாவது:-
நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப்போல் நாடும் உங்களை பாதுகாக்கும். மேலும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் உரையாட உள்ளார். ராணுவ வீரர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர ஒரு இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்கள் மற்றும் வீரர்கள் லேவில் 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்பினர்.
சீனாவுடன் லடாக் எல்லையில் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story