தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது, தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் - பிரதமர் மோடி


தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது, தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Jun 2021 12:44 PM IST (Updated: 27 Jun 2021 12:48 PM IST)
t-max-icont-min-icon

உலகத்திலேயே பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு  வாழ்த்துக்கள்.

பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த்ஜி தமிழ் குறித்து பெருமையாக எடுத்துரைத்துள்ளார். திருக்குறளும் புகழ்பெற்றது.

உலகத்திலேயே பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான். மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது; தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது.  பருவமழை காலம் துவங்க உள்ளது. 

இதனால், தண்ணீரை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story