பள்ளி மாணவிக்கு காதல் கடிதம்: ஆசிரியரை மொட்டை அடித்து, முகத்தில் கரி பூசி, ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமவாசிகள்


பள்ளி மாணவிக்கு காதல் கடிதம்:  ஆசிரியரை மொட்டை அடித்து, முகத்தில் கரி பூசி, ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமவாசிகள்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:53 PM GMT (Updated: 2021-06-27T19:23:41+05:30)

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியரை கிராமவாசிகள் மொட்டை அடித்து, முகத்தில் கரி பூசி, ஊர்வலமாக அழைத்து சென்றனர்.இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்து உள்ளார்.  அவரை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்தியும் வந்துள்ளார்.  காதலை ஏற்க மறுத்து விட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியுமுள்ளார்.

இதுபற்றி தெரிய வந்த கிராமவாசிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.  அவர்கள் அந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசியுள்ளனர்.  இதன்பின்னர் அவரை தெரு வழியே ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த வழக்கில் ஆசிரியரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story