ஜம்மு தாக்குதலுக்கு பிறகு ராணுவ பகுதியில் சுற்றி திரிந்த 2 ஆள் இல்லா விமானங்கள்


ஜம்மு தாக்குதலுக்கு பிறகு ராணுவ பகுதியில் சுற்றி திரிந்த 2  ஆள் இல்லா விமானங்கள்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:17 AM GMT (Updated: 2021-06-28T14:47:53+05:30)

ஜம்மு தாக்குதலுக்கு பிறகு, மேலும் இரண்டு ஆள் இல்லா விமானங்கள் இந்திய ராணுவ பகுதியில் காணப்பட்டன. பாதுகாப்பு படைகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கபட்டது.

புதுடெல்லி

ஜம்முவில் டிரோன்கள் எனும் ஆள் இல்லா விமானங்கள்  மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து உடனடியாக ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பெரிய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் நேற்று அதிகாலையில் குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த சக்தி கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை துணைத் தளபதி ஏர் மார்ஷர் எச்.எஸ்.அரோரா, ஏர் மார்ஷல் விக்ரம் சிங் ஆகியோருடன் பேசி விவரங்களை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் ஜம்மு - காஷ்மீர் மண்டலத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியதாகவும், ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்வால் பகுதியில், 5 கிலோ வெடிமருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ரத்னுசெக்-கலுச்சக் இராணுவப் பகுதியில் 2 ஆள் இல்லா விமானங்கள் கண்டறியப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு லெப்டினன்ட் கேனல் தேவேந்தர் ஆனந்த் கூறுயதாவது:-

ஜூன் 27-28 2021 நள்ளிரவில், ரத்னுசெக்-கலுச்சக்  இராணுவப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தனித்தனி ஆள் இல்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  உடனடியாக ஒரு உயர் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தபட்டது உடனடியாக ஆள்விமான விமானங்கள் அங்கிருந்து பறந்து விட்டன. இதனால் பாதுகாப்பு  படையினரின் எச்சரிக்கை நடவடிக்கையால்  ஒரு பெரிய தாக்குதல்  முறியடிக்கப்பட்டது.பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர், தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என கூறினார்.

Next Story