கொரோனா தடுப்பூசி; அமெரிக்காவை முந்தி வரலாறு படைத்த இந்தியா: மத்திய மந்திரி பெருமிதம்


கொரோனா தடுப்பூசி; அமெரிக்காவை முந்தி வரலாறு படைத்த இந்தியா:  மத்திய மந்திரி பெருமிதம்
x
தினத்தந்தி 28 Jun 2021 10:21 AM GMT (Updated: 2021-06-28T15:51:59+05:30)

கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்தி இந்தியா வரலாறு படைத்து உள்ளது என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

உலகளவில் சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதன்பின் பல்வேறு கட்டங்களுக்கு பின்னர் கடந்த மே 1ந்தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் இன்று கூறும்போது, இதுவரை இந்தியாவில், 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

இதனால், மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்திய எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்தி இந்தியா வரலாறு படைத்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story