கர்நாடகாவில் மேலும் 2,576- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 2,576- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jun 2021 8:52 PM GMT (Updated: 2021-06-29T02:22:51+05:30)

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 2,576 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 37 ஆயிரத்து 206 ஆக உயர்ந்தது.

வைரஸ் தொற்றுக்கு மேலும் 93 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 34 ஆயிரத்து 836 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 5,933 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 755 ஆக உள்ளது. 97 ஆயிரத்து 592 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்” இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story