டெல்லி காவல் ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவா நியமனம் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு


டெல்லி காவல் ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவா நியமனம் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
x
தினத்தந்தி 29 Jun 2021 12:17 PM GMT (Updated: 2021-06-29T17:47:08+05:30)

டெல்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா நாளை (புதன்கிழமை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய காவல் ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாலாஜி ஸ்ரீவஸ்தவா, டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக டெல்லி காவல்துறை ஆணையர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறை தலைவராக பாலாஜி ஸ்ரீவஸ்தவா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story