டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகம்
டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,34,094 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.15 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,971 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,07,592 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 1,531 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story