புதிய கல்வி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்: கர்நாடக துணை முதல்-மந்திரி
புதிய கல்வி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
மரக்கன்றுகளை நட்ட...
சியாம் பிரசாத் முகர்ஜி ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
சியாம் பிரசாத் முகர்ஜியின் ஜெயந்தியை முன்னிட்டு, பா.ஜனதா இளைஞர் அணியினர் விதை பந்துகளை வீசி வருகிறார்கள். இதன் மூலம் மரங்கள் வளரும். எங்கெங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்று இடங்களை அடையாளம் காண வேண்டும். மரக்கன்றுகளை நட்ட பிறகு அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அதை பராமரிக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி
புதிய கல்வி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த சுற்றுச்சூழல் குறித்து பாடம் கற்பிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் நமது நாடு வேகமாக
முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் பசுமையை வளர்க்கும் முயற்சியும் நடக்கிறது. உலக காலநிலையை பாதுகாக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி பிற நாடுகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்துகிறார். நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் வன நிலப்பரப்பு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அத்துடன் வன உயிரினங்களை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையையும் அதிகரித்து உள்ளோம். கர்நாடகத்தில் காற்று மாசுவதை கட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது, சூரியசக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது, மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு அதிக ஊக்கம் அளிப்பது போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.
Related Tags :
Next Story