டாக்டர்கள் தினம்: பிரதமர் மோடி நாளை உரை


டாக்டர்கள் தினம்: பிரதமர் மோடி நாளை உரை
x
தினத்தந்தி 30 Jun 2021 4:08 PM GMT (Updated: 30 Jun 2021 4:08 PM GMT)

தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்-மந்திரி என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.

தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்.

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி டாக்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் முயற்சிகளை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு உரையாற்று உள்ளேன்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மருத்துவர்களின், மருத்துவப் பணியின் முக்கியத்துவம் உலகளவில் உணரப்பட்டுள்ளது.

Next Story