டெல்லி: மக்களை வாட்டி வதைக்கும் வெயில்

டெல்லியில் பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
புதுடெல்லி,
டெல்லியில் பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது.
இது இந்த ஆண்டு இதுவரை பதிவான மிக உயா்ந்ததாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி கூறியுள்ளது. இதற்கிடையே பருவமழை வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜூன் 27ம் தேதி தொடங்கும் பருவமழை, ஜூலை 8ம் தேதிக்குள் நாடு முழுவதும் பெய்வது வழக்கம். ஆனால், இம்முறை பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று வெயிலின் கொடூரம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
Related Tags :
Next Story