கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்: கர்நாடகா


Photo Credit: (Twitter/@DHFWKA)
x
Photo Credit: (Twitter/@DHFWKA)
தினத்தந்தி 2 July 2021 10:29 AM IST (Updated: 2 July 2021 10:29 AM IST)
t-max-icont-min-icon

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

நாட்டில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தற்போதும் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கர்நாடகாவில் தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைவாக உள்ளது. மாநிலத்தில் நேற்று சுமார் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

72 மணி நேரத்திற்கு மிகாமல் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழாக இருக்க வேண்டும். விமானம், ரெயில், பஸ்களில் வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது. 

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அதுகுறித்த சான்றிதழை காட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு விதித்தது நினைவுகூரத்தக்கது.  

Next Story