தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: பாதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பதிவு செய்ய கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு


தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: பாதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பதிவு செய்ய கொல்கத்தா ஐகோர்ட்  உத்தரவு
x
தினத்தந்தி 2 July 2021 7:24 AM GMT (Updated: 2 July 2021 7:24 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை:அனைத்து வழக்குகளையும் பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கவும் கொல்கத்தா ஐகோர்ட் மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கொல்கத்தா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் மோதல் நாடறிந்த விஷயம். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்புக்கும் இடையே சாவல்களும் விடப்பட்டன.தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குகள் கொல்கத்தா  ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரின் வழக்குகளையும் பதிவு செய்யுமாறு கொல்கத்தா ஐகோர்ட் இன்று மேற்கு வங்காள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஐகோர்ட் மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  ரேஷன் கார்டுகள் இல்லை என்றாலும் உணவுப்பொருள்  வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  மேற்கு வங்க தலைமை செயலாளர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

வன்முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பா.ஜனதா தலைவர் அபிஜித் சர்க்காரின் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Next Story