தேசிய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + J&K: Army angers erupted over Jawan's martyrdom, 5 terrorists shot dead

ஜம்மு - காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்சின் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரரும் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் புல்வாமாவைச் சேர்ந்த டேனிஷ் மன்சூர், பாகிஸ்தானின் ரெஹான், நிஷாத் உசேன் லோன் அல்லது டிராலின் திக், மற்றும் ஹஜன் பயானின் அமீர் வாக்யா என அடையாளம் காணப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் அடையாளம் காணப்படவில்லை.

புல்வாமாவில் பதுங்கி உள்ள மேலும் சில பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர்.