இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைவு

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிக தாக்கத்தால் வேலையின்மை விகிதம், ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில், 11.9 சதவீதமாக இருந்தது இந்த நிலையில் ஜூன் மாதத்தில், 9.19 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சி.எம்.ஐ.இ) புள்ளிவிவரம் கூறுகிறது.
நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் மீட்சி காண்பதை அடுத்து, வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாகவும் விரைவில், இதற்கு முந்தைய நிலையான, 6-7 சதவீதத்திற்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம் என்றும் சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதம், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் வேலையின்மை விகிதத்தில் குறைவாகவும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவற்றில் மிக அதிகமாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story