தேசிய செய்திகள்

காஷ்மீர்: வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; பிரதமர் இரங்கல் + "||" + Kashmir: 5 killed as vehicle overturns in ditch; PM condolences

காஷ்மீர்: வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; பிரதமர் இரங்கல்

காஷ்மீர்:  வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; பிரதமர் இரங்கல்
காஷ்மீரில் வாகனம் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.


ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 44ல் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில், ராம்பன் நகரில் இருந்து நீல் ராம்சு நகரை நோக்கி சிலர் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு வாகனத்தின் மீது இந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இச்சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  5 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வேதனையடைந்தேன்.

அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் குரலாக திகழ்ந்தவர் மதுசூதனன்; முதல்-அமைச்சர் இரங்கல்
ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் மதுசூதனன் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
2. தலீபான் தாக்குதல்; இந்திய புகைப்பட செய்தியாளர் மறைவு: தமிழக முதல்-அமைச்சர் இரங்கல்
ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய புகைப்பட செய்தியாளருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
3. ஆ.ராசாவின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஆ.ராசாவின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் காளியண்ணன் கவுண்டர் கொரோனா தொற்றால் மரணம் அரசியல் தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ணன் கவுண்டர் கொரோனா தொற்று காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
5. மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தமிழக முதல்-அமைச்சர் இரங்கல்
கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.