தேசிய செய்திகள்

டெல்லியில் சந்தைகள், வணிக வளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி + "||" + Delhi: Markets, malls permitted to operate from July 3

டெல்லியில் சந்தைகள், வணிக வளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி

டெல்லியில் சந்தைகள், வணிக வளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி
டெல்லியில் கொரோனா வைரசின் 2- வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக  தினசரி கொரோனா பாதிப்பு 100- க்கும் கீழே டெல்லியில் பதிவாகி வருகிறது. தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், இன்று முதல்  டெல்லியில் சந்தைகள், வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. வர்த்தகர்கள் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, டெல்லியில் முக்கிய சந்தை பகுதிகளான லக்‌ஷ்மி நகர் மெயின் பஜார் மற்றும் சுற்றியுள்ள சந்தை பகுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடமாடும் பரிசோதனை மையங்கள், தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தவும் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தகவல்
டெல்லியில் இதுவரை 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
4. 5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
5. டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் நடத்திய ‘உழவர் நாடாளுமன்றம்’
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள், உழவர் நாடாளுமன்றம் நிகழ்சியை நடத்தினர்.