உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு

உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிஷிகேஷ்,
உத்தரகாண்ட் மாநிலம் ஜவாலாபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர். இவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் அபுதாய் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வழக்கு குறித்து பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் கூறுகையில்,
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். சிலர் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள். வழக்கை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story