கடந்த 24 மணி நேரத்தில் 63.87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன


கடந்த 24 மணி நேரத்தில் 63.87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 4 July 2021 3:44 PM IST (Updated: 4 July 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி வரை மொத்தம் 35,12,21306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டுள்ளவர்கள்: 1,02,27,957
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள்: 73,08,968

முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,75,81,755
இரண்டாவது தவணை: 96,55,149

18-44 வயதினர்:
முதல் தவணை: 9,98,28,219
இரண்டாவது தவணை: 27,26,338

45-59 வயதினர்:

முதல் தவணை: 9,05,89,022
இரண்டாவது தவணை: 1,86,76,107

60 வயதுக்கும் மேற்பட்டோர்:
முதல் தவணை: 6,89,10,208
இரண்டாவது தவணை: 2,57,17,583

மொத்தம்: 35,12,21,306

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story