பழைய இரும்பு விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.4,575 கோடி வருவாய் - இந்திய ரெயில்வே


பழைய இரும்பு விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.4,575 கோடி வருவாய் - இந்திய ரெயில்வே
x
தினத்தந்தி 4 July 2021 11:22 PM IST (Updated: 4 July 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

பழைய இரும்பு விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.4,575 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக, கடந்த நிதியாண்டில் (2020-2021) இந்திய ரெயில்வேக்கு பயணிகள் பிரிவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், பழைய இரும்பு விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டி உள்ளது. பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதிய தண்டவாளம் அமைக்கும்போது, ரெயில்வேக்கு ஏராளமான பழைய இரும்பு கிடைக்கிறது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. 

அதில், பழைய இரும்பு விற்பனை மூலம் ரூ.4 ஆயிரத்து 575 கோடி வருவாய் கிடைத்ததாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 5 சதவீதம் அதிகம் என்றும் ரெயில்வே வாரியம் கூறியுள்ளது. மேலும், இந்த பொருட்களின் ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் மின்னணு முறையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story