டெல்லியில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பு

டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 31-ந்தேதி முதல் இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வணிக நிறுவனங்கள், மெட்ரோ ரெயில்-பஸ் போக்குவரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில் பாதியளவு இருக்கைகளை நிரப்பி இயங்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. எனினும் தியேட்டர்கள், நீச்சல் குளம், ஸ்பா, கல்வி நிறுவனங்கள், அரசியல்-சமூக-மத நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story