இந்தியாவில் 3 மாநிலங்களில் சதமடித்த டீசல் விலை


இந்தியாவில் 3 மாநிலங்களில் சதமடித்த டீசல் விலை
x
தினத்தந்தி 5 July 2021 4:59 AM IST (Updated: 5 July 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 3 மாநிலங்களில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.


புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றால் ஒவ்வொரு மாநிலத்துக்கும், எரிபொருள் விலை மாறுபடும்.

கடந்த சில நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, பல மாநிலங்களில் ரூ.100 எட்டியது. இந்நிலையில் நேற்று, மத்திய பிரதேச மாநிலத்தின் பல இடங்களில், டீசல் விலை லிட்டர் ரூ.100 கடந்து விற்பனையானது.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர், ஹனுமன்காட் மற்றும் ஒடிசாவின் சில நகரங்களிலும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது.  இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story