இந்தியாவில் 35.28-கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் 35.28-கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது:  சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 5 July 2021 2:31 PM IST (Updated: 5 July 2021 2:31 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  இன்று தெரிவித்துள்ளது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று கூறியிருப்பதாவது:- 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14,81,583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 35,28,92,046 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

அதில், 28,83,23,682 பேர் முதல் தவணையும் 6,45,68,364 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், இதுவரை 18 முதல் 44 வயதுடையோருக்கு முதல் தவணையாக 10,07,24,211 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 27,77,265 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 


Next Story