பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி


பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி
x
தினத்தந்தி 5 July 2021 4:28 PM IST (Updated: 5 July 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாட்னா,

கொரோனா 2-வது அலை காரணமாக பீகார் மாநிலத்தில் மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கிய பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பீகார் மாநிலத்தில் 50% வருகையுடன் அனைத்து கல்லூரி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உயர்நிலை வகுப்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்களுடன் வேலைபார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

50% இருக்கையுடன் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கும் சிறப்பு தடுப்பூசி வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story