உதவி கேட்ட மாணவனிடம் கடுமையாக நடந்து கொண்ட நடிகர் முகேஷ் எம்.எல்.ஏவுக்கு எதிராக போராட்டம்

உதவி கேட்ட மாணவனிடம் கடுமையாக நடந்து கொண்ட நடிகர் முகேஷ் எம்.எல்.ஏவுக்கு எதிராக கேரளா முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
கொல்லம்
கேரள மாநிலம் கொல்லம் சட்டசபைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக பிரபல நடிகர் முகேஷ் உள்ளார்.
முகேஷ் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விஷ்ணு என்ற 10ம் வகுப்பு மாணவர் தனது நண்பருக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஒரு செல்போன் வாங்க உதவி கோரியதாக கூறியுள்ளார்.
மாணவனின் நண்பரிடம் செல்போன் இல்லை, எனவே அவருக்கு உதவ அவர் எம்.எல்.ஏ.வை அழைத்துள்ளார். மூன்று முறை அழைத்தார், பின்னர் அவர் தொலைபேசியை எடுத்து அழைப்பதாக கூறி உள்ளார். பின்னர், மீண்டும் மீண்டும் மூன்று முறை அழைத்துள்ளார். பின்னர் தொடர்புகொண்ட முகேஷ் மாணவனை கண்ணா பின்னா என்று அந்த மாணவனை திட்டியுள்ளார். அடித்து விடுவேன் என்றும் கூறி உள்ளார். மேலும் விஷ்ணு தனது உள்ளூர் எம்.எல்.ஏ.வை அழைத்திருக்க வேண்டும், அவரை அல்ல என்று முகேஷ் வலியுறுத்தி உள்ளார்.
இந்த ஆடியோ பதிவு வெளியாகி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பில் முகேசுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இளைஞர் காங்கிரஸ் இன்று பாலக்காட்டில் முகேஷின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story