மாநிலங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 கோடி டோஸ்களுக்கு மேல் கையிருப்பில் உள்ளது: மத்திய அரசு


மாநிலங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 கோடி டோஸ்களுக்கு மேல் கையிருப்பில் உள்ளது: மத்திய அரசு
x
தினத்தந்தி 6 July 2021 1:11 AM IST (Updated: 6 July 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது.

அதேநேரம் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து வருகின்றன. இதற்காக 25 சதவீத உற்பத்தியை தனியாருக்கு ஒதுக்க அரசு அனுமதித்து உள்ளது. இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று வரை 36.97 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் 34.95 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், இன்னும் 2.01 கோடிக்கு அதிகமான டோஸ்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிடம் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவும், நாடு முழுவதும் விரிவுபடுத்த உறுதி பூண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Next Story