கேரளாவில் அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம்; புதிய வைரசால் பாதிப்பு?

கேரளாவில் வைரஸ் தாக்கி அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம் அடைந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புகாடு பகுதியில் யானைகள் முகாம் உள்ளது. வனப்பகுதிகளில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குட்டிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு உள்ளன.
இந்நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்பிஸ் என்ற வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயதுடைய குட்டி என்ற பெயரிடப்பட்ட பெண் யானை குட்டி வைரஸ் தாக்கி இறந்தது.
இதுபற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 யானை குட்டிகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த யானை குட்டிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று காலை வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயதான அர்ஜூன் என்ற குட்டியானை இறந்தது. கேரளாவில் வைரஸ் தாக்கி அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் திடீர் மரணம் அடைந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story